Tag Archives: கவிதை

Five years in IT!!!

ஐந்து வருடங்கள் கடந்து வந்துவிட்டோம்!
இதே நாள், ஒரு திங்கள்,
பல பல பயத்தோடு, சில சில கனவுகளோடு,
சென்னையில் இந்த பணியில் சேர்ந்தோம்!
சில தெரிந்த நெஞ்சங்கள், பல தெரியாத முகங்கள்,
ஒன்று கூடினோம், ஒன்றானோம் நட்பினால்!
பாதை, மிக கடினமான பாதை,
சந்தோஷம், அளவில்லா சந்தோஷம்
நினைவுகள் பல உண்டு,
நினைத்து நினைத்து சிரிக்க
அதில் உனக்கும் ஒரு பங்குண்டு, அதற்கு நன்றி!
உலகெங்கும் இன்று நாம்,
சிலர் தன் புது உறவுகளோடு,
சிலர் என்றும் அன்று போல் தனக்காக,
ஆனால் அனைவருக்கும்
ஒரே லட்சியம், ஒரே காரணம் – மதிப்பில்லாத காகிதம்!
இதுவா வாழ்க்கையின் மூலத்தனம்?
இல்லை, உறவுகள் தான்! நட்பு தான்!
நிறுவனங்கள் மாறலாம், உறவுகள் மாறாது,
தேனீர் இடைவேளை மாறலாம், சிரிப்பு மாறாது,
பணியரை மாறலாம், மனநிறைவு மாறாது,
நாடோடி ஆகலாம், நட்பு மாறாது!
உண்மையான நட்பிற்கு பிரிவில்லை,
பிரிந்தும், பார்க்காமலும், பேசாமலும், இருந்தாலும்,
அதற்கு நாமே சாட்சி!
என் இனிய நண்பர்களே,
ஐந்தாம் பணி வருடாந்திர நன்நாள் வாழ்த்துக்கள்!

இன்றும் என்றும் நட்புடன்,
சரவணகுமார் முருகன்
Sarav..